Friday, August 12, 2011

உயர்தினை...

(இரத்துமும் சதையுமாய் உறவுகளை நேசித்த ஒரு பெண்ணின் கதை..)


ணக்கம் முதலாளி, வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சவிரியமில்லை, ரொம்ப நேரம் தாங்காது போல, உடனே வீட்டுக்கு வர சொன்னாங்க, என்று முனியன் சொன்னவுடன் காதர் உடனே வீட்டுக்கு விரைந்தோடினார், அங்கே தன் அக்கா மெஹரிடம் தன் மகள் சகர்பான் கையை பிடித்து “ வாய் பேச முடியாத என் மகளை உன் காலம் போகும் வரை நீதான் பார்த்துக்கனும்” என்று சொல்லி கணவனுக்காக காத்திருக்காமல் கண்மூடி தன் வாழ்க்கையை முடித்தாள் ராவுத்தம்மாள்.

ராவுத்தம்மாள், ஏழுரு சொத்துக்காரி, ஜமின்தாரு மருமகள் (இக்கதை 1950-களிருந்து தொடங்குகின்றது) ராஜபுரத்து முதலாளி காதர் வீட்டுக்காரி, தன் தலைமகள் ஜகான 15 வயசுல மூளைக்காய்ச்சலுக்கு பலி கொடுத்து பெருத்த இடிய மனசுல வாங்கியவள், வாங்கிய வடு மறைவதற்கு
சின்ன மகள செல்லமா வளர்த்தாள், மூத்தவள் போன பின்னதான் அடுத்தவள் சனிச்சாள், மூனு வயசு வர உசிரா வளர்த்த மகள் என்ன நடந்தாலும் உம்முனே இருக்களே , பேச கத்துக்களயேனு முனங்கிட்டே இருந்த சமயத்துல பள்ளிகூடத்துல போய் சேர்க்க, கூட படிச்சதெல்லாம் ஊமைன்னு கிண்டல் பன்ன, உடைஞ்சே போனா, ஏன் சந்தேகம் ? சோதிச்சி பார்த்திருவோமேனு வீதியில போன பாட்சாவ கூப்பிட்டாள், “ ஏலே பாட்சா, இங்கே வாயேன், என் புள்ளைய ஊரு பயவுளயெல்லாம் ஊமைன்னு சொல்லுடுதடா கொஞ்சம் என்னனு பாரேன்னு சொன்னா, வந்தான் பாட்சா, வாசல்கிட்ட இருந்த மன்பானைய தண்ணியோட தூக்கி சகர்பான் பின்னாடி போட்டுடைச்சான், கொஞ்சமும் சலனம் காட்டல சகர்பான், பானையோட உடைஞ்சு போனா இராவுத்தம்மா, நெஞ்ச புடிச்சு சரிஞ்சவள் நாலு வருசம் படுத்த படுக்கையாயிட்ட காதர் செய்யாத வைத்தியம் இல்லை, உயிர் கடைசி வரை மகள நெனைச்சி உருகியே கடைசியில உசிரயே விட்டுட்டா...

(தொடரும்..)


No comments:

Post a Comment