அன்று எனக்கு 6 வயது, பகட்டாய் தெரிந்த நகரத்து வாழ்க்கை, கிராமத்தில் இருந்து என்னை பிரித்த பொழுது எந்த ஒரு வருத்தமும் எனக்கு இல்லை, நான் பின்னால் இழக்க போகும் சொர்க்கத்தை , என் உழைப்பை, என் சுறுசுறுப்பை, எதையும் காட்டவில்லை...
என் கண்ணில் தெரிந்தது எல்லாம் நகரத்து கற்பனை மட்டுமே, எங்கும் நிறைந்த அடுக்குமாடி சிறைச்சாலைகள், அந்த பகட்டு மனிதர்கள், சிட்டாய் தெருக்களில் அலையும் கார்பன் மோனாக்ஸைடு தெளிப்பான்கள், இப்படி கற்பனையில் மிதந்த நான் நகரத்து மாயையில் கிராமத்தை இழக்க துணிந்தேன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment